Tuesday, June 22, 2010

Traffic - நம்ம ஊர் ஸ்டைல்!

மிக வேகமாக வளர்ந்து வரும் இந்திய மற்றும் சீன நகரங்களில் டிராபிக் என்பது மிகப் பெரிய (சோகமான?) விஷயம். தினம் தினம் நடக்கும் விபத்துக்கள், எரிச்சல்கள், டென்ஷன்கள் எல்லாவற்றையும் அனுபவித்தவர்கள்/அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள் நம்மில் பலர் இருப்போம். அதற்கு எடுத்துக்காட்டாக  மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்ட இரண்டு YouTube வீடியோக்கள்! இது இரண்டுமே சில வருடங்களுக்கு முன் உள்ளது போல. அப்பவே இப்படின்னா.....!!Friday, June 18, 2010

இலவச கிரிக்கெட் ஒளிபரப்பு - மீண்டும்!

நாளைக் (சனிக்கிழமை) காலை அமெரிக்க நேரம் 5 மணிக்கு (EST) இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன ஆசியக்கோப்பை போட்டி நடைபெறுகிறது. இந்தத் தொடர் முழுவதும் அமெரிக்காவில் ESPN வலையில் இலவசமாக ஒளிபரப்பப் படுகிறது. cricinfo வலையில் இருந்தும் ESPN செல்லலாம். இந்திய-பாகிஸ்தான் போட்டிகள் என்றும்  ஸ்பெஷல் தான்!!

Wednesday, June 9, 2010

கிரிக்கெட்டும் பேஸ்பாலும்!!

எல்லாரும் 2010 உலகக் கோப்பை கால்பந்து பற்றிய காய்ச்சல்ல தகிச்சுக்கிட்டு இருக்கும்போது அதைக் கொஞ்சம் மட்டுப்படுத்த மத்த விளையாட்டுகளைப் பற்றி  ஒரு பதிவு!

கிரிக்கெட்டும் பேஸ்பாலும் ஒண்ணுவிட்ட சகோதரர்கள் மாதிரின்னு இரண்டு விளையாட்டையும் பார்த்த எல்லாருக்கும் தோணியிருக்கும். அது என்னவோ இந்தியால கிரிக்கெட் பிரபலம் அடைஞ்ச அளவு பேஸ்பால் ஆகலை. சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும்போது (எல்லாரும் சின்ன வயசுல தானே ஸ்கூல் படிப்பாங்கன்னுக் கேட்கக்கூடாது!) ஸாப்ட் பால்ன்னு ஒரு குத்துமதிப்பா கிரிக்கெட்டுக்கும் பேஸ்பாலுக்கும் இடைப்பட்ட ஒரு விளையாட்டை ஆடியது நினைவில் உள்ளது. ஆனாலும் கிரிக்கெட் தான் என்னைக்கும் முதல் சாய்ஸ்!

இந்தியாவில் இருந்து இங்க அமெரிக்கா வந்த நிறைய பேருக்கு பேஸ்பால் (MLB) மற்றும் பாஸ்கெட்பால் (NBA) தான் பிடிக்கும். இந்த ஊரு புட்பால், ஐஸ் ஹாக்கி போன்ற விளையாட்டுகள்  ரெண்டாம் பட்சம் தான்னு தோணுது. இந்த பேஸ்பால் விளையாட்டுக்கு கிரிக்கெட் உடன் நிறைய தொடர்பு உண்டு. கிரிக்கெட் எப்படி இங்கிலாந்துல இருந்து மற்ற இடங்களுக்கு பரவியதுன்னு சொல்லுறாங்களோ அதே போல பேஸ்பாலும் அங்கே இருந்து தான் வந்ததுனு அவனுங்க சொல்ல, அமெரிக்காக்காரங்களோ இல்லை, பல இடங்களில் அதே போல விளையாட்டு இருந்தாலும் பேஸ்பால் விளையாடும் முறை அமெரிக்காவில் உருவானது தான்னு சொல்லிட்டு இருந்தாங்க. 1755 ல ஒரு இங்கிலிஷ்காரர் பேஸ்பால் அப்படிங்கற வார்த்தையையே தனது டைரில எழுதியதை வச்சு இப்ப அது தான் பழமை வாய்ந்த பேஸ்பால் குறிப்புன்னு எல்லாரும் ஒத்துகிட்டாங்க. லண்டன்-ல இருக்கிற MCC அருங்காட்சியகத்துல இதைப் பற்றி ஒரு exhibition இப்போது நடந்திட்டு இருக்குதாம். பக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் போய் ஒரு எட்டு பார்த்திட்டு வந்து சொல்லுங்க.

மத்தபடி கிரிக்கெட்டுக்கும் பேஸ்பாலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்னன்னா, கிரிக்கெட்டுல 11 பேரு, அங்கே 9. பந்தை எரியுறது, மட்டையைக் கொண்டு அடிக்கிறது, பிடிச்சா ஆட்டம் காலின்னு நிறைய ஒற்றுமைகள் உண்டு. நாம சிக்ஸர்ன்னு சொல்லுறதை இங்க ஹோம் ரன்னு சொல்லுவாங்க. நாம 2 innings (இல்லாட்டி 1) ல முடிக்கிற விளையாட்டை இவங்க 9 innings- ல முடிப்பாங்க. நம்ம ஊரு IPL மாதிரி இங்க MLB (Major League Baseball). ஏப்ரல் மாசம் கொஞ்சம் குளிர் குறைய ஆரம்பிச்ச உடன் ஆரம்பிக்கிற சீசன் அக்டோபர் வரை போகும். MLB ல நேஷனல் லீக், அமெரிக்கன் லீக் என்று ரெண்டு பிரிவு. ஒண்ணுல 14 அணிகள், இன்னொண்ணுல 16. ரெண்டு பிரிவுலயும் 100 க்கும் மேற்பட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு சாம்பியன் பட்டம் கொடுக்கப்படும். அப்புறம் இரண்டு பிரிவுலயும் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு இடைய உலக சாம்பியன் போட்டிகள் நடக்கும். "உலக" சாம்பியன்ன்னு சொன்னாலும் பங்கேற்கும்  30 அணிகள்ள 29 அமெரிக்காவைச் சேர்ந்ததுதான். (ஹி..ஹி..இன்னொன்னு பக்கத்துக்கு ஊரு டொரோண்டோலர்ந்து!). கிரிக்கெட் எப்படி ஒரு சில நாடுகளில் மட்டும் தான் பிரபலமோ அதே போல பேஸ்பாலும் அமெரிக்கா, கனடாவை விட்டா கியூபா, ஜப்பான், தைவான் போன்ற சில நாடுகளில் மட்டுமே பிரபலம்.

2010 MLB சீசன் ஆரம்பிச்சு தினமும் போட்டிகள் களைகட்டுது. என்ன, தினமும் அதைப் பார்க்கத் தான் நேரம் கிடைக்க மாட்டேங்குது. இதுக்கு நடுவுல NBA இறுதிப் போட்டிகள் வேற (லேகேர்ஸ் - செல்டிக்ஸ்) நடந்திட்டு இருக்குது. அதுக்குள்ள 2010 கால்பந்து உலகக்கோப்பை வேற 2 நாள்-ல ஆரம்பிக்கிறாங்களாம். ஒரு மனுஷனுக்கு எவ்வளவு பிரஷர் பாருங்க. நல்ல வேளை, ஜிம்பாப்வே கூட தோத்து போய் இந்திய கிரிக்கெட் அணி சீக்கிரம் வூட்டுக்கு திரும்பியதில் அந்த பக்கம் கொஞ்சம் ரிலீப்! வாழ்க!! இப்ப, இந்த பேஸ்பால் மற்றும் கிரிக்கெட் பத்தி எல்லாம் தெரிஞ்சு என்ன ஆகப்போகுதுன்னு கேட்கிறவங்க...ஹி ஹி...கம்ப்யூட்டர்-ஐ மூடிட்டுப் போய் புள்ளைங்களைப் படிக்க வையுங்க! :-)

Wednesday, June 2, 2010

தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடல்!!

கலைஞரின் எழுத்தில், A. R. ரஹ்மான் இசையில், கவுதம் மேனன் இயக்கத்தில் தமிழ் 
செம்மொழி மாநாட்டுப் பாடல் - ஒலி/ஒளி!!