நாம ஸ்கூல்ல படிக்கும்போதே கட்டுரை எல்லாம் ஒரு விவரமா தான் எழுதுவோம்..ஸ்கூல்-ஐ விட்டு வெளிய போகாமலயே இன்ப சுற்றுலா ன்னு கட்டுரை எழுத சொல்லுவாரு நம்ம தமிழ் ஐயா. நாமளும் கோனார் நோட்ஸ், போன வருஷத்து அண்ணன் நோட்ஸ் ன்னு பார்த்து ஒரு குத்துமதிப்பா சுற்றுலா போய்ட்டு வந்திருவோம். English ல "As I am suffering from fever" ஐயே பல காலம் பயன்படுத்தினோம். இப்படிப்பட்ட சிறப்புடைய நம்மளை போய் ஒரு முழு பக்கக் கட்டுரை, அதுவும் கரடியை பத்தி, எழுத சொன்னா என்ன பண்ணுறது..
இதுல பெரிய கொடுமை என்னன்னா நமக்கு முன்னாடி யாரெல்லாம் கரடியை குடும்ப உறுப்பினரா கூட்டிட்டு போயிருந்தாங்களோ அவங்க எல்லாம் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு ஒரு பக்கம் பத்தாம பின் பக்கம், extra ஒரு பக்கம் சேர்த்துன்னு கதை கதையா எழுதி நமக்கு Peer pressure வேற அதிகம் ஆயிருச்சு. அதுலயும் சில பேரு சனிக்கிழமை கரடிக்கு பிடிச்ச (?) sweets (ஏதோ ஒரு வகை cake) எல்லாம் செய்து சாப்பிட்டோம்-ன்னு வேற எழுதிருந்தாங்க. எனக்கு தெரிஞ்சு கரடிக்கு பிடிச்ச ஒரே sweet தேன் தானே? இப்ப மாத்திட்டாங்களா? இதெல்லாம் வெளிய சொல்லி சத்தமா comment கூட அடிக்க முடியாது..அப்புறம் என் பொண்ணு, "அப்பா, கிண்டல் பண்ணாதே, buddy bear will be upset" ன்னு சொல்லிட்டா என்னால தாங்கவே முடியாது...அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்...
நல்ல வேளையா அந்த வார இறுதி தான் இங்க halloween. Trick or treat ன்னு ராப்பிச்சை எடுக்க போகும்போது buddy ஐயும் தூக்கிட்டு போய்ட்டு வந்து அதை வச்சே ஒரு பக்கம் (கொஞ்சம் பெரிய எழுத்தா எழுதி, ரெண்டு ரெண்டு line விட்டுன்னு ஒரு மாதிரி இழுத்து கொண்டு வந்திட்டோம்ல..!) எழுதியாச்சு..சும்மா சொல்லக் கூடாது..buddy ஐ கொண்டு போனதுக்கு நல்ல response. நிறைய சாக்லேட் கிடைச்சது..ஒரு பக்கம் எழுதியதுக்கு அடுத்த ஒரு வாரம் எனக்கு சாக்லேட் பஞ்சம் இல்லை?!!! ஹா ஹா...
அதற்கு அடுத்த வாரம் North Carolina வில் இருக்கும் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது இந்த விஷயத்தை பத்தி சொன்னா, அங்கயும் இதே கதை தானாம். ஹ்ம்ம்....ஒரு குரூப்-ஆ தான் எல்லாரும் கிளம்பிருக்காங்க போல? நாம தான் சூதானமா இருந்துக்கனும், மக்களே..அடுத்த முறை பள்ளியில் இருந்து எதாவது பெரிய பை வந்தா, உடனே கையுல ஒரு band-aid போட்டு பொறுப்பை தள்ளி விட்டுற வேண்டியது தான்..அதுக்கு response-ஆ laundry, vacuum, shopping ன்னு வேலைகள் உங்க தலைல விழுந்தா அதற்கு எருமை நிர்வாகம் பொறுப்பில்லை.