இந்த வாரம் சனிகிழமை இரவு (நம்ம local டைம்) 6th ODI மேட்ச் ஆரம்பிக்குதுன்னு ரொம்ப ஆவலுடன் பார்க்க ஆரம்பிச்சேன். ஒரு நண்பர் வீட்டுக்கு போய்ட்டு வந்ததால முதல் 10 ஓவர் பார்க்க முடியலை. ஹ்ம்ம்.. என்னத்த சொல்ல...அதுக்குள்ள நம்ம சிங்கங்கள் 36/5 ல வந்து நின்னுட்டாங்க. Bowlers ஒழுங்கா போட்டா batsmen கவுத்திர்ரானுங்க, batsmen ஒழுங்கா ஆடினா bowlers கவுத்திர்ரானுங்க. இப்படியாக கிரிக்கெட் பார்கிறதை இழுத்து மூடிட்டு கவுந்திட்டேன். அதெப்படி ஆஸ்திரேலியா team குள்ள வர்ற bowlers (Bollinger, Johnson, Hauritz etc. etc.) எல்லாரும் சொதப்பலா ஆரம்பிச்சிட்டு அப்புறம் few series ல தெளிவா ஆட ஆரம்பிச்சிர்ராங்க..நம்ம team bowlers எல்லாம் தெளிவா ஆரம்பிச்சு few series ல super aa சொதப்புறாங்க. (Ishant, Sreesanth, Balaji, R.P. Singh etc. etc.). அது என்னவோ தெரியலை, என்ன மாயமோ தெரியலை..
இப்படி எல்லாம் புலம்பினாலும் அடுத்த series வரும்போதும் (SL series), நாம எல்லாரும் தேசப்பற்றுடன் திரும்ப கிரிக்கெட் பார்க்க உட்கார்ந்திருவோமே..அதை சொல்லணும்?
1 comment:
அன்பின் நண்ப
ஆதங்கம் புரிகிறது - இருப்பினும் கிரிக்கேட் கிரிக்கெட் தானே - வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும்
நல்வாழ்த்துகள் நண்ப
Post a Comment