Tuesday, December 29, 2009
4 படங்களின் விமர்சனங்கள்
AFGHAN STAR (2009): தலிபான் "ஆட்சி" முடிந்த பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளி வந்திருக்கும் மிகச்சில documentary படங்களில் இதுவும் ஒன்று. அமெரிக்காவில் சில வருடங்களாக மிகவும் பிரபலமாக இருக்கும் American Idol நிகழ்ச்சி ஆப்கானிஸ்தானில் இப்போது மிகவும் பிரபலமாம். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் நால்வரின் (2 ஆண்கள், 2 பெண்கள்) உண்மை வாழ்கையையும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் தான் இந்த படம். ஏற்கனவே டாகுமெண்டரி என்று கூறியிருக்கிறேன் - அப்படியே படத்தில் வரும் அனைவரின் கருத்தை மட்டும் கூறுவதோடு நிறுத்திக்கொள்வது படத்துக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். 30 வருடங்களாக போரில், அதுவும் சில வருடங்கள் தலிபான் ஆட்சியில், கஷ்டப்பட்ட ஒரு நாட்டில் மேலை நாகரிகமான ஆடல், பாடல் நிகழ்ச்சியை தொலைகாட்சியில் நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்று தெரிகிறது. ஆப்கான் நாட்டில் தற்சமயம் நிலவும் வறுமை, மக்களின் வாழ்க்கை முறை போன்றவற்றைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. பங்கு பெரும் 4 பேரையும் அவர்களது tribe ஐ பொருத்து பொதுமக்கள் ஆதரிப்பது நம்ம ஊரு தேர்தல் மற்றும் ஜாதி வேட்பாளர்களை நினைவுப் படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. 4 போட்டியாளர்களில் ஒரு பெண் பாடும்போது சற்றே உடல் அசைத்து பாடியதற்கு முழு நாடும் கண்டனம் தெரிவித்து (இஸ்லாமிய விதிகளுக்கு புறம்பானது என்று) அந்த பெண் தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்படுகிறது. (இந்த இடத்தில யாருக்காவது மயிலாட குயிலாட போன்ற நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தால் எனக்கு தெரியாது!!). முழுப் படத்தைப் பற்றியும் கூறி உங்களைப் படுத்த விரும்பவில்லை. நம்மைப் போல் ஆப்கான் பற்றி CNN இல், அமெரிக்காவின் கண்களால் மட்டுமே பார்த்து வந்தவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம். கூடிய விரைவில் இந்த படம் DVD இல் வரும் என்று தெரிகிறது. http://www.afghanstardocumentary.com/
THE COVE (2009): Investigative journalism என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் கற்பிப்பதைப் போல் வந்திருக்கும் டாகுமெண்டரி படம். ஆனால் "திரைக்கதை" மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டு இருப்பதால் ஒரு த்ரில்லர் படம் பார்ப்பதைப் போன்ற அனுபவம் கிடைக்கிறது. ஜப்பானில் Taji என்ற சிறு கிராமத்தில் Dolphin- களுக்கு இழைக்கப்படும் கொடுமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல சுற்றுசூழலில் அக்கறை உள்ள ஒரு குழு படும் பாடு தான் படம். Dolphin களை பாசமான, அறிவுள்ள ஒரு மீன் என்றே உலகின் பல்வேறு காட்சிகளில் பார்த்து வந்த நமக்கு முதன்முறையாக எப்படி அதைப் பிடிக்கிறார்கள், அதன் விலை, பிடிக்கும்போது அவை உட்படுத்தப்படும் கொடுமைகள் போன்றவை மனத்தைக் காயப்படுத்தும் விவரங்கள். Taji கிராமத்து அரசியல்வாதிகளில் இருந்து ஜப்பான் நாட்டின் அரசியல் வரை இதில் யார்யாருக்கு எப்படி பங்கு என்ற உண்மைகள் சுடுகின்றது. Dolphin மீன்களில் உள்ள mercury அளவு எப்படி மக்களை பாதிக்கின்றது, உலகில் கடல்வளங்கள் எப்படி சூறை ஆடப் படுகிறது போன்ற தற்காலத்துக்கு மிகவும் தேவையான அறிவியல் விவரங்களை முகத்தில் அறைவது போல் கூறி இருப்பதில் இயக்குனர் வெற்றி பெறுகிறார். இந்தப் படம் தற்சமயம் அமெரிக்காவில் DVD இல் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு: http://www.thecovemovie.com/
DISTRICT 9 (2009): Neill Blomkamp என்ற இளம் இயக்குனரின் (தென் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்) முதல் முழுநீள படம். வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வருவதைப் பற்றி ஏற்கனவே எத்தனையோ படங்கள் பார்த்திருந்ததால் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் தான் இந்தப் படத்தை பார்க்க ஆரம்பித்தேன். சில வருடங்களுக்கு முன் தமிழில் வந்த விருமாண்டிப் படத்தைப் போல் hand-held camera வில் பலரைப் பேட்டி எடுப்பதைப் போல் தான் படம் ஆரம்பிக்கிறது. சரி மொக்கை போட்டு விடுவார்கள் என்று நினைத்தால் படம் சூடு பிடிக்கிறது. கதையென்று மிகவும் வித்தியாசமாக இல்லை. Hollywood Science Fiction படங்களுக்கே உரிய விலையுயர்ந்த சண்டைகளும் கிராபிக்ஸ் களும் இல்லை. இருந்தாலும் சில நுண்ணிய வித்தியாசங்கள் காட்டி இருப்பதன் மூலம் குறைந்த செலவு படங்களையும் வெற்றி ஆக்கி காட்ட முடியும் என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டிருகிறது. வேற்றுகிரக கப்பல் என்றால் அது New York, Los Angeles, Rome போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள, உலகில் பலருக்கு தெரிந்த நகரத்திற்கு தான் வரும் என்ற Hollywood "உண்மையை" மாற்றி தென் ஆப்ரிக்காவில் உள்ள Johannesburg நகரத்திற்கு வருவதாக காட்டி இருப்பது ரசிக்கத் தக்கது. வேற்றுகிரக வாசிகளின் குடிசை வாழ்க்கை, தென் ஆப்ரிக்காவில் இருக்கும் இனவெறி பாகுபாடுகள் போன்றவற்றையும் படத்தில் இணைத்திருப்பது நம்மை நிமிர்ந்து பார்க்க வைகிறது. இதுவும் தற்சமயம் அமெரிக்காவில் DVD இல் கிடைக்கிறது.
THE HANGOVER (2009): சமீபத்தில் நான் பார்த்த நல்ல நகைச்சுவை படங்களில் இது ஒன்று. கமல்/crazy மோகன் கூட்டணியில் வந்து அதிகம் சிந்திக்காமல், ஆனால் சிரிக்க வைக்கும் படங்களைப் போன்றது இது. ரொம்ப யோசிக்க எல்லாம் கூடாது..ஆனால் சிரிப்புக்கு guarantee உண்டு. ஒரு நண்பனின் திருமணத்திருக்கு முன் bachelor party கொண்டாட Las Vegas செல்லும் ஒரு நண்பர் கூட்டத்திற்கு அங்கு நடக்கும் நிகழ்வுகள் தான் கதை.
(பின்குறிப்பு: என்ன, ஆங்கிலப் படங்களைப் பற்றி, அதுவும் டாகுமெண்டரி போன்ற படங்களைப் பற்றி மட்டும் தான் விமர்சனம் வருமா என்று கேட்காதீங்க..சமீபத்துல நான் பார்த்த தமிழ் படங்களை மறக்க நானே ரொம்ப கஷ்டப் பட்டுட்டு இருக்கிறேன்..வேணாம்...அழுதிருவேன்..)
Labels:
Movies
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Sooooooooooper !!!
வேட்டைக்காரன் பற்றி எழுதலாமே (அழுது கொண்டே....)
இன்னும்.. ஆஃப்கன் ஸ்டார் பார்க்கலைங்க தல. அறிமுகத்திற்கு மிக்க நன்றி! :)
எழுதப் போகும் டாப் 10 லிஸ்டில் The Cove-வும் இருக்கு! :)
தமிழிஷ் & தமிழ்மணமில் இணைக்கலாமே?
அப்புறம் இந்த வேர்ட் வெரிஃபிகேஷனையும் தூக்கிடுங்களேன்.
அன்பின் நண்ப
விமர்சனம் நன்று
நல்வாழ்த்துகள் நண்ப
Post a Comment