1000 க்கும் மேற்பட்ட விசிட்டர்ஸ், 2000 க்கும் மேற்பட்ட ஹிட்ஸ்ன்னு சூப்பர்-ஹிட் திரைப்பட ரேஞ்சுக்கு போய்ட்டு இருந்த நம்ம ப்ளாக்ல ஒரு சின்ன இடைவெளி விழுந்திருச்சு 10 நாளா, மன்னிக்கவும். (சரி சரி, படம் ரிலீஸ் ஆகி 3 நாள் முழுசா ஆகுறதுக்குள்ள ஈடு இணையற்ற முதலாவது வாரம்ன்னு போஸ்டர் அடிச்சா மட்டும் ஒத்துகிறீங்க!).
********************
21 ஆவது குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டி சமீபத்துல வான்கூவர், கனடாவில நடந்து முடிஞ்சுது நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்காது. நான் இருக்கும் ஊருல (அமெரிக்காவில வடக்கு பக்கம் இருக்கும் எல்லா குளிர் ஊருலயும்?) குளிர்கால ஒலிம்பிக்ஸ் ஒரு பெரிய விஷயம். நம்ம ஊருல எப்படி கிரிக்கெட் நடக்கும்போது எல்லாரும் மந்திரிச்சு விட்ட மாதிரி திரியுராங்களோ அது மாதிரி இங்க ஐஸ் ஹாக்கி. இந்த வருட ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற ஒரு அமெரிக்க ஜோடி நம்ம ஊரு ஹிந்தி பாட்டு இசைக்கு பனிசறுக்கு ஆடியது வித்தியாசமா இருந்தது. விருப்பம் இருக்கிறவங்க அதை யூட்யூப்- ல பார்க்க செல்லுங்கள் இங்கே!!. பைனல்-ல ஐஸ் ஹாக்கில அமெரிக்கா தோத்துப் போய் அடுத்த நாள் எல்லாம் சோகமா சுத்திட்டு இருந்தது வேற விஷயம்! (பி.கு. இந்தியால இருந்தும் 3 பேரு இந்த ஒலிம்பிக்ஸ்ல கலந்துகிட்டாங்க. அவங்க கலந்துகிட்ட போட்டிகளில் 29, 81, 83 ஆவது இடத்தை பிடிச்சாங்க!).
********************
கமலஹாசனின் 50 வருட கலையுலக சேவையை முன்னிட்டு நடந்த விழாவில ரஜினிகாந்த் அவரைப் பாராட்டி பேசும்போது அமிதாப், ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால், விஷ்ணுவர்தன், கமல் எல்லாருமே கலைத்தாயின் குழந்தைகள் என்றும் ஆனால் கமல் தான் ஸ்பெஷல், எப்போதும் கலைத் தாயின் இடுப்புலயே இருப்பாருன்னு சொன்னாராம். நல்ல ஐடியா தான். ரூம் போட்டு யோசிச்சு சொல்லிட்டாரு. அத்தோட விட வேண்டியது தானே. இந்த ஐடியாவை ஒரு பெயிண்டரை வச்சு படமா வரைஞ்சு அதை கமலுக்கு கொடுத்தாராம். நீங்களே அந்த படத்தை கொஞ்சம் பாருங்க. ஆர்ட் ஸ்கூல்-ல பிட் அடிச்சு, அரியர்ஸ் வச்சு பாஸ் பண்ணுரவங்களே இதை விட நல்ல வரைய மாட்டங்க? ஏதோ ஒரு பெயிண்டிங்கை எடுத்து அதுல எல்லார் மூஞ்சியையும் கட் அண்ட் பேஸ்ட் பண்ணிருக்காங்க. இதை வேற கமல் தன் அலுவலகத்துல மாட்டி வச்சு பெருமை பட்டுக்கிறாராம். இதுல காண்டு யாருக்கு - அந்த பெயிண்டருக்கா, ரஜினிக்கா, கமலுக்கான்னு தான் நமக்கு புரிய மாட்டேங்குது!! அந்த பெயிண்டிங்கை நல்ல பாருங்க..எல்லா குழந்தைகளும் சிங்கிள் பீஸ் டிரஸ் போட்டிருக்கும்போது ரஜினிக்கு மட்டும் கழுத்துல எக்ஸ்ட்ரா பிட்டிங் ஸ்டைல் பார்த்தீங்களா?
********************


********************
நாடாளுமன்ற கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு விஷயத்தில் வோட்டளிப்பதை விட்டுவிட்டு நெல்லையில் மாநாட்டில் கலந்து கொண்டார் மத்திய அமைச்சர் அழகிரி. ஆமா..அங்க போனா மட்டும் எதுவும் புரிஞ்சிர போகுதாக்கும்? அவன் அவன் மசோதாவை ஆதரிச்சு பேசுறானா எதிர்த்து பேசுறானான்னே நமக்கு புரியாதே. திருநோலி போனாலாது நம்ம மக்கா பேசுறது விளங்கும்லா..என்ன சொல்லுதீய?
********************
இன்றைய quotable quote: "நித்யானந்தருக்கு நான் செய்தது சேவை, பணிவிடை" - நடிகை ரஞ்சிதா.
(பி.கு. நித்யா மேட்டரை விட்டுரணும்னு தான் பார்த்தேன்..முடியலை.!!!)
********************
6 comments:
மகளிர் மசோதா பத்தி நீங்க என்ன சொல்லுதீய ?? !!
அது மெய்யாலுமே பெண்கள் நலனுக்ககவா, இல்லை அரசின் திசை திருப்பலா ?
http://manakkan.blogspot.com/2010/03/blog-post_10.html
//நித்யா மேட்டரை விட்டுரணும்னு//
something fishy... !!!!!
கூட்டாஞ்சோறு நல்லா இக்குதுபா..
அடிக்கடி சோறு போட்டா வயிறார சாப்புடுவோம்ல?
நன்றி சுப்பு, சத்யா, முகிலன்.
சுப்பு உங்க ப்ளாக் படிச்சேன்..அங்க வந்து பதில் சொல்லுறேன். சத்யா, எல்லாரும் நித்யாவை தொங்க விட்டு தோரணம் கட்டியாச்சு..இதுல நாம என்னத்த புதுசா சொல்லா இருக்குதுன்னு விட்டேன். வேற fish உம் இல்லை, நண்டும் இல்லை!
முகிலன் - அடிக்கடி வரணும்னு தான் ஆசை..சில நாட்களாக வேலைப் பளு அதிகம். கூடிய விரைவில் அடிக்கடி வந்து உங்களைப் பழி வாங்குறேன்!
நான் ஒரு 3-4 நாள் ஒலிம்பிக்ஸ் பார்த்துட்டு அப்புறம் உடம்பு சரியில்லாம போனது அது இதுன்னு வந்து...விட்டுட்டேன்.
இந்தப் பாட்டுக்கெல்லாம் ஆடி நம்ம மானத்தையும் சேர்த்து வாங்கறானுங்களே! :)
எதிர்த்து பேசுறானான்னே நமக்கு புரியாதே. திருநோலி போனாலாது நம்ம மக்கா பேசுறது விளங்கும்லா..என்ன சொல்லுதீய?
ne(o)llai tamizh mattum puriyuma enna?
கூட்டாஞ்சோறு நல்லா இக்குதுபா..
அடிக்கடி சோறு போட்டா வயிறார சாப்புடுவோம்ல?
pochuraaa.. soru sappitta e(i)dai koodum nnu adutha karuthazham mikka post ready aayitttirukkO?
Post a Comment