Tuesday, November 3, 2009

வணக்கம் அன்பர்களே

வணக்கம் அன்பர்களே,
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் பிறந்து 7 வருடங்கள் கடையம், பின்னர் 3 வருடங்கள் கூனியூர் (சேரன்மகாதேவி அருகில்)ன்னு வளர்ந்து, அப்புறம் ஒரு 6 வருடங்கள் காவிரிக்  கரையில் கும்பகோணத்தில்  வாசம் (அப்பாவின் வேலை காரணம்). மீண்டும் 4 வருடங்கள் தென் தமிழ்நாடு (வல்லநாடு - திருநெல்வேலி அருகில், ஆனால் தூத்துக்குடி மாவட்டம்) வந்து கல்லூரிப் படிப்பு.  பின்னர் 2 வருடங்கள் மதுரையில் முதுகலைப் படிப்பு. அத்துடன் தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்து 6 வருடங்கள் பெங்களூரில் Ph.D.

2000 வருடம் இந்தியாவை விட்டு வெளியே வந்து சில வருடங்கள் Israel நாட்டில் ஆராய்ச்சி, பின்னர் அமெரிக்காவில் Florida வில் சில வருடங்கள் ஆராய்ச்சி எல்லாம் முடித்து கடந்த 3 வருடங்களாக New York மாகாணத்தில் உள்ள Buffalo நகரத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

இன்றிலிருந்து இந்த blog துவக்கம்...swalpa wait maadi....இது எந்த மாதிரி blog ஆ இருக்கும்னு எனக்கும் தெரியாது...பொறுத்திருந்து பார்ப்போமே?!!

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் எருமை ( ?? )

இப்படி அழைக்கவே மறுக்கிறது மனம்

ஒரு பெயர் வைத்துக் கொள்ளக் கூடாதா

அன்பின் நண்ப

நாற்பது வயதில் எருமை என அழைப்பதா - இயலாத செயல்

நல்வாழ்த்துகள் நண்ப

கலக்குக

அருமையான எருமை said...

நன்றி! இன்னும் நாங்கல்லாம் யூத்து தான்! யூத்து தான்! 40 வயசு ஆகலீங்க!!!