Sunday, October 3, 2010

வண்டி கட்டிட்டு போய் எந்திரன்!

எந்திரன் - அனைத்து தமிழ் புத்தகங்களிலும் ப்லாக்க்களிலும் துவைத்து தொங்க போட்டுகொண்டு இருக்கப்படும் வார்த்தை. இங்க நம்ம ஊரில் பொட்டி கிடைக்க வில்லை என்று ரிலீஸ் சிறிது தாமதம் ஆகுவது போல தெரிந்த உடன் பக்கத்தில் எந்த ஊரில் ரிலீஸ் என்று தேடினால் இங்கிருந்து ஒரு மணி நேரத்தில் இருக்கும் ராச்சஸ்டரில் தினமும் 3 காட்சிகளாக ஒரு வாரத்திற்கு ஓடுவதாக கண்டுபிடித்தோம். நம்ம ஊரு படங்கள், அதுவும் கிட்டத்தட்ட 3 மணிநேர படங்கள் எல்லாம் குழந்தைகள் உட்கார்ந்து பார்ப்பது கஷ்டம் என்பதால் நண்பர்கள் (bachelor party மாதிரி!)  குழுவாக  6 பேர் சனிக்கிழமை மதியம் 4:35 மணி காட்சிக்கு கிளம்பினோம். நண்பர் தனது வண்டியை எந்திரன் போஸ்டர் உடன் தயார் செய்து வைத்திருந்தார். எந்திரன் பாடல்கள், எந்திரன் போஸ்டர், சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் போட்ட அலங்காரங்கள் என்று ஒரு மூட் உடன் தான் கிளம்பினோம்.

4 மணிக்கு தியேட்டர் சென்று அடைந்தால் சுத்தமாக கூட்டமே இல்லை. வெளியே எந்திரன் படப்பெயரை பார்த்த உடன் கொஞ்சம் நிம்மதி. சரியான இடத்திற்குத் தான் வந்திருகோம்ன்னு. ஆன்-லைன் டிக்கெட்டை ($20 ஒரு டிக்கட்) குடுத்து டிக்கட் வாங்கி விட்டு வரிசையில் நின்றால் நமக்கு முன்னாடி நின்னுகிட்டு இருந்த கும்பலும் பின்னாடி நின்ன கும்பலும் தெலுங்குல பேசிக்கிட்டு இருந்த உடன் எல்லாருக்கும் சந்தேகம். பார்க்க வந்தது எந்திரனா இல்லை எந்திருடுவான்னு. தியேட்டர்காரன்கிட்ட கேட்டு என்ன ஆகப்போகுது - அவனுக்கு தமிழும் ஒன்னுதான், தெலுங்குவும் ஒன்னுதானே. சரின்னு போன்ல ஆன்-லைன் டிக்கெட் புக் பண்ணிய விவரத்தைப் பார்த்து அதில் தமிழ் தான் என்று தெரிந்த  உடன் தான் கொஞ்சம் நிம்மதி.

கிட்டத்தட்ட 500 பேரு உட்கார்ற தியேட்டர்ல மொத்தமே 50 பேரு தான் இருந்திருப்போம். (ராவணன் ஹிந்தி படம் பார்த்ததுக்கு இது பரவாயில்லை - அதுல தியேட்டர்லயே நாங்க ரெண்டு பேரு தான் இருந்தோம்!). சனிக்கிழமை மதியக் காட்சி என்பதால் நல்ல கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்து போய் பெரிய அல்வா!   படம் - நல்ல படம், ஆனா ரஜினி ஸ்டைல், பஞ்ச் எல்லாம் மிஸ்ஸிங். ரஜினிக்கும் ஐஸ்வார்யாவுக்கும் முகத்தில் வயசு தெரிகிறது என்பது உண்மை!! நல்ல ஜனரஞ்சகமான படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை?! படம் முடிந்ததும் ராச்சஸ்ட்டரில் உள்ள மைசூர் உட்லண்ட்ஸ் உணவகத்தில் நல்ல உணவிற்கு பிறகு வீடு திரும்பினோம்!! படங்கள் கீழே.

அமெரிக்க box office இல் எந்திரன் முதல் இடம் என்று இன்று நம்ம ஊரு செய்திகளில் கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது தான் அமெரிக்காவில் இந்த வார இறுதிக்கான box office நிலவரம் ..இதுல எந்திரன் எங்க இருக்குனு நீங்களே தேடிக்கோங்க..BOX ஆபீஸ். எப்படி எல்லாம் படத்தை விளம்பரம் பண்ணுறாங்க..பெருமை பீத்தக்களையங்கன்னா இது தானோ?

6 comments:

Unknown said...

பாஸ் அது போனவார பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம். இந்த வார பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் அடுத்த வெள்ளிக்கிழமை தான் வெளிவரும்.

மதிய ஷோ வந்தீங்களா? ஈவினிங் ஷோவா?

dagilan said...

enakkum mugilan davuttu than.. 435 show enral enga ooril adhu malai katchi enappadum. analum vandi katti poi padam parthirukkeega. kodaikkanal malai padayatthiraya pona kalathil padhi malayil oru kiramam varum. ilaipparum podhu andha ooru makkal kitta pesinal mgr kalathula avanuvalum enga oorukku vandi katti varuvome thalaivar padam release aana time la nnu sonnanuva. inraya thalaimuraiyum andha parambariyathai thottu thodarum nu seyyum podhu.. kannila thanneee!

அருமையான எருமை said...

நன்றிகள், இங்கு வந்து கருத்து தெரிவித்ததற்கு. நாங்க போனது 4:35 காட்சி, சனிக்கிழமை. (4 மணிக்கு வந்து சேர்ந்தோம் என்று கூறி இருந்தேன்). முகிலன்: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் படம் ரிலீஸ் ஆன வார இறுதியில் தான் முக்கியம். அமெரிக்காவில் வெள்ளி அன்று அனைத்து படங்களும் ரிலீஸ் ஆவதால் அந்த வீக்-எண்டு கலக்ஷனை வச்சு தான் #1, 2 வரிசை. நான் போட்டிருக்கும் லிங்கில் பாருங்கள் - இந்த வெள்ளியன்று (எந்திரன் உடன்) ரிலீஸ் ஆன social network, case 39, let me in போன்ற படங்கள் ஏற்கனவே top 10 வரிசையில் உள்ளது.மேலும் Oct 1 - 3 studio estimates என்று போட்டிருப்பார்கள். அமெரிக்காவில் top 10 படங்கள் எல்லாம் கிட்டத்தட்ட 2000-3000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. எந்திரன் என்ன ஒரு 20-50 தியேட்டர்களில் போட்டிருபார்களா? அதனால் தான் எப்படி பாக்ஸ் ஆபீஸ் முதலிடம் என்று எனக்கு தெரியவில்லை.

Anonymous said...

america vil top 10 illayo? ulagengum kootti kazhichu parthal endhiran top la varumO?
http://movies.rediff.com/report/2010/oct/08/endhiran-takes-world-by-storm.htm

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

Anonymous said...

kathirundhu kathirundhu
kaalangal pogudhadi

engal porumai kkum oru ellai undu