Thursday, February 18, 2010

கூட்டாஞ்சோறு 1 !!

உலக ப்ளாக் வரலாற்றிலே யாருமே செய்யாத புதுமை - அடிக்கடி நாட்டு நடப்பு விஷயங்களைக் கலவையா எழுதுறது!!! (ஹி..ஹி...)!!! நமக்கும் அந்த வியாதி வந்திருச்சுன்னு சொல்லி இந்த கூட்டாஞ்சோறு பதிவுகளை ஆரம்பிச்சு வைக்கிறேன். கூட்டாஞ்சோறு திருநெல்வேலி மக்களின் வாழ்வில் முக்கியமான ஒன்று. கூட்டாஞ்சோறு கட்டிக்கிட்டு தாமிரபரணி ஆத்துலையோ, குற்றாலம், பாபநாசம், மனிமுத்தார் நீர்வீழ்ச்சிகளிலோ போய் ஒரு கட்டு கட்டிட்டு வர்றது அனைவருக்கும் பிடித்த ஒன்று! அதுனால அந்த பெயர்லயே ஆரம்பிக்கிறேன். (கூட்டாஞ்சோறு, திருநெல்வேலி முறையில் செய்ய ரெசிபி வேணும்னா சொல்லுங்க..அதையும் போட்ருவோம்!!!).

                                                          ********************
மரியாதை நிமித்தமாக  வியாழன் அன்று கலைஞரை சந்தித்தார் நடிகர் அஜித். அதான் போன வாரம் பாராட்டு விழாவில மரியாதை செலுத்திருப்பாரே இப்ப என்ன புதுசா? ஒரு வேளை அவரு அங்க பேசிய பேச்சுக்கு அந்த பக்கத்துல இருந்து வந்த பதில் "மரியாதையை" தாங்க முடியலையோ? ஹி...ஹி....அதுக்குள்ள இவர் தான்  ஆம்பளை, தன்மானத்  தமிழன், தைரியமா பேசுற ஒரே நடிகர் ன்னு ஓவரா பில்ட்-அப் குடுத்திட்டாங்க எல்லாரும்?!!! அப்புறம் கட்டின வீடு, தோட்டம் எல்லாம் புறம்போக்கு நிலத்துல கட்டினதுன்னு  நாளைக்கு நோட்டீஸ் வந்தா அவரு என்ன பண்ணுவாரு?
                                                        ********************
தமிழ் நாட்டில் கடந்த வருடம் சாலை விபத்தில் 13,000  பேர் இறந்தனர் - ஆனந்த விகடன் செய்தி. அமெரிக்காவில சராசரியா வருடத்திற்கு 50,000 பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். தமிழக மக்கள் தொகை - 6.5 கோடி. அமெரிக்கா மக்கள் தொகை - 30 கோடி. கூட்டிக்கழிச்சு பார்த்தா தமிழகம் அமெரிக்காவை தாண்டிருச்சு!! அடுத்த தேர்தல்ல இனிமேல் மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன், மதுரையை சிங்கப்பூர் ஆக்குவேன்னு எல்லாம் உதார் விட முடியாது..நாம தான் அமெரிக்காவையே மிஞ்சிட்டமே!

                                                        ********************
தென் ஆப்ரிக்கா  உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ததின் மூலம் இந்தியா ICC தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது...வாழ்த்துக்கள். என்னத்த 20-20 மாதிரி காட்டுஅடி கந்தசாமிங்க விளையாட்டு வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் - தி பெஸ்ட் கிரிக்கெட் தான்! 
                                                        ********************
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. A. K. அந்தோணி கூறியது: எந்த ஒரு நாட்டின் ஒரு அங்குல இடத்தை கூட இந்தியா ஆக்கிரமிக்காது, அதுபோல இந்தியாவின் அங்குல இடத்தை எந்த நாடுகளும் ஆக்கிரமிக்க இந்தியா அனுமதிக்காது!! இவருக்கு அம்னீஷியாவா? இல்லை சீனாவும் நம்ம நாடுன்னு நினைச்சுக்கிறாரா? 
                                                        ********************
திருப்பதியில் சர்வதேச தரத்தில் விமான நிலையம்: செய்தி. லேண்ட் ஆகும்போதும் டேக்-ஆப் செய்யும்போதும் பைலட் கோவிந்தா! கோவிந்தா!! ன்னு சொல்லாம இருந்த சரி தான்!!
                                                        ********************
இந்த வார quotable quote: "என் மேல யாரும் கை வைக்க முடியாது!! நான் என்ன செய்யுறேன்னு தெரிஞ்சி தான் செய்யுறேன்" - நயன்தாரா. (பி.கு. நயன்தாரா பத்தி செய்தி போட்டுட்டு போட்டோ போடலேன்னா நம்ம ரசிகர்கள் ரெம்ப டென்சன் ஆயிருவாங்களே..அதுனால ஒரு படம் கீழே!!)
                                                         ********************


6 comments:

shabi said...

umpires win the game

சின்னப் பையன் said...

:-))))))

சங்கரராம் said...

rashiththen

அருமையான எருமை said...

ஷாபி, ச்சின்னப் பையன், சங்கரராம்: இங்கு வந்து உங்கள் கருத்துக்களைத் தெரிவிச்சதுக்கு நன்றி.
ஷாபி: கடைசி நாள் ஆட்டத்துல 7 விக்கெட் விழுற வரை பார்த்தேன். umpire விக்கெட் எடுத்த மாதிரி எனக்கு தெரியவில்லை.

ஆடுமாடு said...

கூட்டாஞ்சோறு பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

அருமையான எருமை said...

நன்றி ஆடுமாடு அவர்களே! இந்தப் பக்கம் வந்து கருத்துக்களைப் பகிர்ந்து சென்றதுக்கு நன்றி! கூடிய சீக்கிரம் கூட்டாஞ்சோறு செய்முறை போட்ருவோம்!