Tuesday, July 6, 2010

கூட்டாஞ்சோறு - 3

அமெரிக்காவில சுதந்திர தின விடுமுறை 3 நாட்கள் முடிந்து எல்லாரும் ரொம்ப டயர்ட்-ஆ ஆபீஸ்ல ஓய்வெடுக்க போயிருப்போம்! இந்த இடைப்பட்ட காலத்துல நடந்த விஷயங்களின் தொகுப்பு இது!

வருத்தம்: கண்டிப்பாக செல்லவேண்டும் என்று நினைத்தும் கடைசி நேரத்தில் சில சொந்தக் காரணங்களால் கனக்டிகட் FETNA விழாவிற்கு செல்ல இயலாதது வருத்தம் தான். தொலைபேசியில்  அழைத்த பதிவர் சின்னப்பையனுக்கு நன்றி. பழமைபேசியின் பதிவுகளில் இருந்து விவரங்கள் தெரிந்து கொண்டேன். சிறப்பான ஒரு விழாவை நடத்தியதற்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.  
வியப்பு: ஜூன் மாதத்தில் வரிசையாக 3 உலகப் போட்டிகளில் பட்டம் வென்ற சாய்னா நேஹ்வல்! உலக பாட்மிண்டன் தர வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் - முதலாவது இடமும் சாத்தியமே. பிரகாஷ் படுகோனுக்கு பிறகு பாட்மிண்டன் ஆட்டத்தில் இந்தியாவில் மிகவும் சாதித்தவர். எப்படி இவரை இதுவரை நம்ம ஊரு விளம்பர, மாடலிங் உலகம் விட்டுவைத்தது என்று வியந்து கொண்டிருக்கும்போது இன்று காலை நியூஸ் - Saina Nehwal shuttles on the ramp for designer Pallavi Jaipur என்று - சங்கு ஊதிரதீங்கப்பூ!
சிரிப்பு:  கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தமிழ் தொல்லைக்காட்சி நிகழ்சிகளைப் பார்க்கிறேன் - வீட்டில் கொடுத்திருக்கும் கலைஞர், ஜெயா டிவி வழியாக. சில நாட்களுக்கு முன்னாடி ஒரே நாளில்  கலைஞர் செய்திகள்  மற்றும் ஜெயா செய்திகள் பார்த்தேன். முதலில் கலைஞர் - தலைப்புச் செய்தி (வேற என்ன செம்மொழி மாநாடு தான்!) முடிந்ததும் அடுத்த செய்தி - உயர்நீதி மன்றங்களில் தமிழில் வாதாட அனுமதி. வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி! 30 நிமிடங்கள் கழித்து ஜெயாவில் தலைப்புச் செய்தி - தமிழ்நாட்டில் தமிழில் வாதாட முடியாதா - வழக்கறிஞர்கள் போராட்டம். அடுத்த 10 நிமிடத்திற்கு வெவ்வேறு ஊர்களில் நடந்த "போராட்டங்கள்" பற்றிய காட்சிகளும் இருந்தது. நம்மூரு மக்கள் ரொம்ப பாவம் தான்! இதுக்காகத் தான் அவங்களும் செய்திகள் எல்லாம் பார்க்காம சீரியல்-ல மூழ்கிராங்களோ??
குழப்பம் மற்றும் கொலைவெறி: நம்மூருலயும் ராவணன் (ஹிந்தியில) தியேட்டர்ல போடுறாங்களேன்னு நானும் இன்னொரு நண்பரும் இரவு 10 மணிக்காட்சி சென்றோம் ஒரு வாரநாளில். 500 - 600 பேரு அமரக்கூடிய அரங்கில் நானும் அவரும் மட்டும் தான்!! எந்த இடத்தில் உட்கார்ந்தா படம் நல்லாத் தெரியும்னு கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்தது. படம் நடந்திட்டு இருக்கும்போது தியேட்டர்காரன் ஒருத்தன் வந்து எட்டிப் பார்த்திட்டு வேற போனான். வெளிய நின்னு எல்லாரும் நம்மளைப் பத்தி சொல்லி சொல்லி சிரிச்சிருப்பான்களோ? படம் - கொலைவெறி! முதல் வாரத்துலயே யாரும் பார்க்காத படத்தை விடாப்பிடியாக 2 வாரங்கள், தினமும் 4 காட்சிகள்ன்னு ரிலையன்ஸ் ஓட்டினாங்க. காந்தி கணக்கு காட்டத்தான் இந்த படமா?
 ஸ்ஸ்ஸ்ஸ். அப்பாடி!: ஒரு வழியா தோனிக்கு கல்யாணம் ஆயிருச்சாம். முந்தின நாள் நிச்சயதார்த்தம்-ன்னு செய்தி. திடீர்னு அடுத்த நாள் கல்யாணமாம். லக்ஷ்மி ராய், தீபிகா, அசின் மாதிரி ஆட்கள் எல்லாம் இனிமேல் சினிமால கவனத்தை செலுத்தி நமக்கும் நிறைய கலைப்படைப்புகள் கிடைக்கும். 

5 comments:

அமுதா கிருஷ்ணா said...

இந்த சேனலில் அவுங்களை திட்டுவாங்க,,அந்த சேனலில் இவுங்களை திட்டுவாங்க..இராவணன் சும்மா ஓட்டுறாங்க இங்கேயும்...

ராம்ஜி_யாஹூ said...

wishes to Dhoni and his wife

அருமையான எருமை said...

நன்றி அமுதா, ராம்ஜி. ராவணனை சும்மா ஓட்டலாம் - அதுக்காக இப்படியா!! என்னத்த சொல்ல?!!

summa thaan said...

summa enga otta vacheenga.. adhaen kuthukkallattam 2 per pOi ukkAndheeyale.. ungaLla reliance kku guinness attempt fail aayiruchu.. unga 2 perayum thedi auto vandhittu irukkudhu.

Partha said...

படம் - கொலைவெறி! hmmmmmmmmm..., neenga ippadi sollutheenga.... aanal, unga rendu perukaga artha-raathirila padam ottiyae aaga vanedum engira nilaikku ullakka-patta theater-kaaran manasum "intha rendu perukkum en intha kolai veri" endru than kettu irukkum. athanala than nadula vanthu irukeengala poiteengala endru check seithu irukkan