Monday, January 4, 2010

பனி விழும் மலர் (?) வனம்...

Christmas, புது வருடம் என்று விடுமுறைகள் முடிந்து சோகத்துடன் அனைவரும் வேலைக்கு திரும்பும் சமயத்தில் அமெரிக்கா முழுவதிலும்,  வட இந்தியாவிலும் சில நாட்களாக நல்ல குளிர் என்று தெரிகிறது.  இங்கு Florida, Texas போன்ற தென் மாகாணங்களில் கூட  நல்ல குளிர் போல. கடந்த 3-4 நாட்களாக இங்கு Buffalo வில்  நல்ல பனிப்பொழிவு.  வெள்ளி இரவிலிருந்து ஞாயிறு மாலைக்குள் கிட்ட தட்ட ஒரு அடிக்கு  பனி விழுந்தது. பனி அழகை ரசிக்க இங்க சில படங்கள்...(ஞாயிறு மாலை எடுத்தது..). (Christmas மரம் எனது வீட்டிற்கு எதிர் வரிசையில் உள்ள வீட்டு  வாசலில். கிட்டத்தட்ட 2 படிகளை மறைக்கும் அளவு எனது வீட்டு  வாசலில் பனி).
Buffalo, NY பனிப்பொழிவிற்கு மிகவும் பெயர் பெற்றது. ஆனால் அதில் பல விஷயங்கள் பொய்யானவை தான். முதலில் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது Lake Effect Snow எனப்படும் ஏரியால் உருவாகும் பனி பற்றி.  குளிர் காலங்களில் வரும் பனிப்பொழிவு பொதுவாக  பனிப் புயலால் (winter storm) உருவாகுவது தான். ஆனால் ஏரிகளுக்கு அருகில் இருக்கும் (Buffalo போன்ற) இடங்களில் Lake Effect தான் பலப் பனிப் பொழிவுகளுக்கு காரணம்.

வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்ஷியஸ்க்கு  (32 F) கீழ் செல்லும் போது நீர் பனிக்கட்டியாக மாறும். ஆனால், குளிர் கால ஆரம்பத்தில் தட்ப வெப்பம் ஜீரோ டிகிரிக்கு கீழ் சென்றாலும் ஏரிகளில் இருக்கும் நீர் உறைந்திருக்காது. (இது ஏன் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள specific heat capacity பற்றி தெரிந்து கொள்வது அவசியம். விருப்பம் இருப்பவர்கள் விக்கீபீடியாவில் படித்து அறிந்து கொள்ளலாம்). அப்பொழுது குளிர்ந்த காற்று ஏரிகளின் மேல் வீசும் போது அதில் உள்ள ஈரப் பதத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள ஊர்களில் பனியாகப் பொழியும். இது ஏரிகளில் அருகில் உள்ள இடங்களில் மட்டும் நடக்கும் ஒரு localised effect. எனவே Lake Effect Snow என்பது சில மைல் தூரங்களிலையே மிகுந்த வித்தியாசம் கொடுக்கும். உதாரணமாக Buffalo வில் இருந்து சில மைல் தொலைவில் (தென்புறம்) உள்ள மலைப் பகுதிகளில் 2-3 அடி பனி பெய்யும் போது இங்கு கால் அடிக்கும் குறைவாகத்தான் பனி பெய்யும். பல வருடங்கள் ஜனவரி மத்தியிலோ இறுதியிலோ  ஏரிகளின் மேல் புறம் உள்ள நீர் உறைந்து பனிக்கட்டியாக மாறி விடும். அதற்குப்பின் இந்த Lake Effect Snow முடிந்து சாதாரணப் பனிப்பொழிவு மட்டும் தான் இருக்கும்.

ஆனால், செய்தி தாள்களில் A foot of snow engulfs Buffalo போன்ற செய்திகளைப் பார்த்துவிட்டு போன் செய்யும் நண்பர்களுக்கு நாங்கள் பல முறை ஏமாற்றம் தான் அளித்துள்ளோம்! மேலும் Buffalo வின் மிகப்  பெரிய புறநகர்கள் ஆன Amherst, Williamsville (இங்கு தான் மக்கள் தொகை அதிகம்) பகுதிகள் அருகில் உள்ள 2 ஏரிகளுக்கு (Lake Erie, Lake Ontario) நடுவில் உள்ளது போல அமைந்துள்ளதால் புறநகர்களில் பனிப் பொழிவு மிகவும் குறைவு. இருந்தாலும், வருடத்தில் 3-4 முறை இது போல கிட்டத்தட்ட ஒரு அடி பனி பெய்யும். அப்பொழுது குழந்தைகளுக்கு மிகவும் கொண்டாட்டம்..பனி மனிதன் (snow man) செய்வது, அருகில் உள்ள park களுக்கு சென்று சரிவில் வழுக்கி விளையாடுவது என்று ஊரே களை கட்டும்! அந்தப்  படங்கள் கூடிய விரைவில்..

8 comments:

Partha said...

Hmm...., Good Photos. Enjoy the snow.
Today at San Diego it is sunny 74F.

ச்சின்னப் பையன் said...

ம். அண்ணா.. இப்ப சரியாயிடுச்சு போல...

ச்சின்னப் பையன் said...

எருமை.. சாரி.. நீங்க ஸ்கேட்டிங் பண்ற மாதிரி எதுவும் படம் இல்லையே???? :-)))

தமிழ்மணம், தமிலிஷ் இதிலெல்லாம் இணைச்சீங்கன்னா மக்கள் வருவாங்க... ஓகேவா...

Arumaiyana Erumai said...

Partha.. இது உனக்கே அடுக்குமா..74 F, sunny ன்னு சொல்லி வயிதெரிச்சலைக் கிளப்பாதே மாமூ!!!

Arumaiyana Erumai said...

நன்றி ச்சின்னப் பையன்...கமெண்ட்ஸ் அனுப்ப இருந்த பிரச்னை தீர்ந்துவிட்டதுன்னு நினைக்கிறேன். எருமை சருக்குற மாதிரி போட்டோ எடுக்க ஆள் கிடைக்கலையே..camera trick, graphics கலக்கல் ல எடுக்கலாமான்னு p.c. sriram, james cameron கிட்ட கேட்டிருக்கேன்..பதில் வந்த உடன் போட்டோ அனுப்புறேன்..:-)

sarvan said...

cool images.

ஹாலிவுட் பாலா said...

தமிழிஷில்.. இந்த கட்டுரையை... இணைங்க அருமை! :)

இங்க நேத்து நைட்டு 21 இருந்ததாம். ஹாலிவுட்டில்.. 40-க்கு கீழ போனாலே அது ரெக்கார்ட்.

இதுக்கே எனக்குத் தாங்கலை. நீங்கல்லாம் எப்படி வாழ்க்கை நடத்துறீங்களோ போங்க.

Arumaiyana Erumai said...

நன்றி பாலா!! தமிலிஷ், தமிழ்மணம் ரெண்டுலயும் இணைச்சிட்டேன்...இதை ச்சின்னப்பையனும் சொல்லிருந்தாரு. நன்றிகள்! உங்க ஊருல ஆரஞ்சு தோட்டத்துல குளிர் தாங்க முடியாம தண்ணி அடிக்கிறாங்க போல.. (செடிக்கு தாங்க!). இந்த ஊரு குளிர் முதல் வருஷம் கொஞ்சம் கடியாத்தான் இருந்தது..அப்புறம் பழகிருச்சு!