Sunday, January 10, 2010

சுண்டக் கஞ்சியும் தித்திப்புச் சோறும்!!!

சென்னைச் சிங்கம் ஒன்று இந்த  எருமைக்காக எழுதியது..நன்றி நண்பரே!
------------------------------------------------------------------------
வணக்கமுங்க,  நான் தான் போதை குமார்!!!......இனிமே அடிக்கடி  உங்கள பல போதை சமாச்சாரங்களோட  சந்திக்க  போறேன் ( ஆசிரியர் வாய்ப்பளித்தால்!).  ஒவ்வொரு மனுஷனுக்கும் ஏதோ ஒரு போதை அப்பப்ப தேவை படுது.... நாகர்கோயில்ல ஜிஞ்சர் , வட ஆற்காடு மாவட்டத்துல மது கசாயம், கேரள பக்கம் சுட சுட சாராயம்.... இப்படி பல வகையான சோம பானங்கள் உண்டு... அது போல சென்னம்மா பட்டணத்துக்கும் ஒரு விசேஷமான சோம பானம் உண்டு அது தான் நம்ம சுண்டக்  கஞ்சிங்க...

முதல சுண்ட கஞ்சி எப்படி செய்றாங்கன்னு பார்க்கலாம்.....  நல்ல உயர் ரக அரிசிய (ரேஷன் அரிசி மாதிரி ன்னு வச்சுகோங்களேன்..) நல்ல வடிச்சிட்டு அத ஒரு வெள்ளை துணியல போட்டு ஒரு சோறு கூட இன்னொரு  சோறு ஒட்டாம உலர்த்தனும்.. அப்புறம் அத ஒரு மண் பானையில போட்டு அதுக்குள்ள போதை மருந்து  கொஞ்சம்  ஊத்தி ( போதை  மருந்து பேரு தெரியலைங்க)   அந்த வெள்ளை துணியால் வேடு கட்டி நல்ல பள்ளம் தோண்டி அத கடல்  மண்ணுக்குள்ள பொதைச்சிடுவாங்க.. அப்புறம் அத  ஒரு பத்து பதினஞ்சு நாலு கழிச்சு  தோண்டி எடுக்கணும் அப்புறமா அந்த வெள்ளை துணிய அவுத்து பார்த்த அந்த சோறு நல்லா  நொதி வந்து பொங்கி இருக்கும் ....அப்போ மேலாவ   இருக்க  அந்த  நொதிஞ்ச சோறு எடுத்து தனியா  வைப்பாங்க,  அது பேரு தித்திப்பு சோறு...

இது தாங்க  ரொம்ப விசேஷமானது ஏன்னா  அதுல தான் போதையே  இருக்கு... அப்புறம் உள்ள இருக்குற  சோறுல தண்ணியே  ஊத்தி கலக்கிட்டு அப்புறம் அந்த தித்திப்பு  சோறையும் போட்டு நல்ல பிசையணும்..பிறகு  அந்த கலக்குன   தண்ணிய  ஒரு சொம்புல குடிச்சா ரொம்ப பிரமாதமா இருக்கும் ..... இதுக்கு  தொட்டுக்க எலி பூச்சியும், நண்டு மசாலாவும், வறுத்த மீனும் சாப்பிடணும்..... ரொம்ப நல்லா  இருக்கும்... (சொல்லும் போதே நாக்குல தண்ணி தட்டுதுங்க).

இந்த சுண்ட கஞ்சி  தாங்க பல பேருக்கு காலை நாஷ்டா....... இது உடம்புக்கு நல்லா குளிர்ச்சி தரும்.... ஒரு  சொம்பு சுண்ட  கஞ்சி இரண்டு  இளநீருக்கு சமம்னு  இங்க இருக்க பல அனுபவசாலிங்க சொல்லுவாங்க....

நாங்க கல்லூரில  படிக்கும் போது  அல்லா  சனிக்கிழமையும் காலைல பெசன்ட்நகர் பீச்க்கு போவோம்
அங்கே தான் அது ரொம்ப  அது விசேஷம் ... சில சமயங்கள்ல நாங்க காசிமேடு , நடுக்குப்பம், டுமிங் குப்பம், சீனிவாசபுரம் போன்ற இடங்களுக்கும்  போவோம்....  இதமான அந்த கடல் அலை ஒசையோட,  அந்த கருவாட்டு வாசனையோட, பசபசப்பான அந்த உப்பு காத்தோட, ஒரு அழகான ஓலை குடிசைல, கோணி துணி திரைல உட்கார்ந்து பக்கிட் பக்கிடா  குடிக்கிற  சுகமே  தனி  தாங்க.... இன்னா...நான் சொல்லுறது கரீட்டு தானே!?

5 comments:

A.M. said...

இதமான அந்த கடல் அலை ஒசையோட, அந்த கருவாட்டு வாசனையோட, பசபசப்பான அந்த உப்பு காத்தோட, ஒரு அழகான ஓலை குடிசைல, கோணி துணி திரைல உட்கார்ந்து

idhai padikkayilE appadiE oru bARathi raja padathil varum pAttukkana kAtchi thAn theriyudhu.. enna.. dEvadhaigaL missing!

cheena (சீனா) said...

அன்பின் நண்ப

வாழ்க சிங்கம் - சென்னையின் மகத்துவங்களில் இதுவும் ஒன்று

நன்று நன்று

நல்வாழ்த்துகள் நண்ப

Arumaiyana Erumai said...

நன்றிகள்! இந்த பக்கமும் வந்து உங்கள் விமர்சனங்களை தெரிவித்து சென்றதற்கு!

விக்கியுலகம் said...

நண்பா எனக்கு ஞாபகப்படுத்திட்டீங்க...உங்க பதிவின் லிங்கை நான் கொடுக்கறேன்...நன்றி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மேட் இன் பெசன்ட் நகர்தானே?