Sunday, February 21, 2010

அலை கடலென திரண்டு வாரீர்!



வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் (FETNA) விழா இந்த வருடம் கனக்டிகட் மாகாணத்தில் உள்ள வாட்டர்பரி என்ற ஊரில் நடைபெறுகிறது என்று தெரிகிறது. வழக்கம்போல் ஜூலை 4 (அமெரிக்க சுதந்திர தினம்) விடுமுறையை ஒட்டி 3 நாட்கள் பெரிய விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது என்று FETNA வலைப் பக்கத்தில் இருந்தும் (FETNA) சக பதிவர் ச்சின்னப் பையனின் வலைப் பக்கத்தில் (பூச்சாண்டி) இருந்தும் தெரிந்து கொண்டேன்.

நான் இதுவரை இந்த வருடாந்திர விழாவிற்கு சென்றதில்லை. சென்ற வருடம் செல்ல வேண்டும் என்று சில நண்பர்களுடன் பேசினோம். ஆனால், அது ஜார்ஜியா  மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரத்தில் நடந்தது. இங்கு இருந்து அது வெகு தொலைவு என்பதால் கைகூடவில்லை. இந்த வருடம் நமக்குப் பக்கத்தில் (6 மணி நேர கார் பயணம் தான்) தான் நடைபெறுவதால் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

வட அமெரிக்காவில் தமிழ் மக்களைப் பார்த்து பழகவும், தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கவும் இந்த விழா ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று நினைக்கிறேன். இந்த வருட விழாவிற்கு இயக்குனர் பாரதிராஜா, நடிகர் விக்ரம், நடிகர் பார்த்திபன், நடிகர் வடிவேலு, நடிகர் சூர்யா, இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கவிஞர் தாமரை போன்ற தமிழக பிரபலங்கள் வருகையும்  தெருக்கூத்து,  குழந்தைகள் நிகழ்ச்சிகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்படுகின்றது என்று தெரிகிறது.

சுத்துப் பட்டு 18 மாகாணத்துல  இருக்கும் சனங்க எல்லாரும் வண்டி கட்டிட்டு வந்து ஆதரவு தருமாறுக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நம்ம ஊருப் (Buffalo, NY ) பக்கத்துல இருந்து யாராவது  போறதுக்கு விருப்பமா இருந்தீங்கன்னா சொல்லுங்க. ஒரு நாளைக்கு 500 ரூபாய், பிரியாணி பொட்டலம், குவார்டர் சரக்கு எல்லாம் கொடுத்து லாரியில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!!

4 comments:

சின்னப் பையன் said...

நன்றி...!!!

Thekkikattan|தெகா said...

ஒரு நாளைக்கு 500 ரூபாய், பிரியாணி பொட்டலம், குவார்டர் சரக்கு எல்லாம் கொடுத்து லாரியில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!///

:)) நான் பக்கத்தில இல்லாம போயிட்டேனே... குவார்டர் எல்லாம் கொடுத்து 500 ரூவா வேற...:)))

Partha said...

hmmm...., vote podavae Rs.5000/- kudukiranga... FETNA ku 500$ pottu kudungappu...!!

அருமையான எருமை said...

நன்றி தெகா!! பேயாம இந்த பக்கம் வந்திருங்க..லாரில உங்களையும் கூட்டிட்டு போயிருவோம்!

பார்த்தா! வோட்டு போட 5000 ரூபா குடுக்கிறவங்க எல்லாம் உலக மகா பணக்காரங்கள்ள வர்றவுங்க..நானெல்லாம் எம்மாத்திரம்..நீ வாய் விட்டு கேட்டுட்டே..கூட ஒரு 50 ரூபாவும் ஒரு காபியும் வேணா சேர்த்துக்கிறேன்!!!