Thursday, July 22, 2010
அமெரிக்காவைப் பிடித்து ஆட்டும் புது பேஷன் - ஸில்லி பேண்ட்ஸ் !!
அமெரிக்காவில் இருக்கும் பெற்றோர்கள் யாரும் இந்த "வியாதி"யில் இருந்து தப்பித்து இருக்க முடியாது - அது தான் Silly Bandz!! (இங்கே சென்று பார்க்கலாம்!). 2, 3 வயது குழந்தைகளில் இருந்து டீன்-ஏஜர்கள் வரை அனைவரது கைகளிலும் மாரியாத்தா காப்பு கட்டியது போல இப்போது ஸில்லி பேன்ட்ஸ். ஒண்ணும் புது விஷயம் எல்லாம் இல்லை. சாதாரண சிலிகான் ரப்பர் பேண்ட்-ஐத் தான் வெவ்வேறு டிசைன்களில் செய்து விக்கிறார்கள். விலங்குகள், கடல் உயிரினங்கள், ABCD மாதிரி டிசைன், சதுரம், முக்கோணம் போன்ற டிசைன்கள் என்று பலவிதம். அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு சென்ற ஒரு வியாபாரக் குழு அங்கே இதே போல ரப்பர் பேண்ட்-ஐப் பார்த்து இந்த ஐடியா நல்லா இருக்கே என்று இங்கு வந்து செய்ய ஆரம்பித்துள்ளார்கள். பெரிய பிசினஸ் பிளான் எல்லாம் எதுவுமில்லாமல் சில கடைகளில் 2008 இல் கிடைக்க ஆரம்பித்தது சென்ற வருட இறுதியில் அமெரிக்காவில் அதிகமாக விற்கும் பொருட்களில் ஒன்றாக ஆகிவிட்டது. திடீர் என்று எதிர்பாராமல் ஏகப்பட்ட டிமாண்டு! பள்ளிகளில் குழந்தைகள் வெவ்வேறு டிசைன்களை மாற்றிக்கொள்வதும், அதே போல் டிசைன் தனக்கும் வேண்டும் என்று அடம் பிடிப்பதும் அன்றாட நிகழ்வாகி விட்டது. இதனால் வெறுத்து போன சில பள்ளிகள் silly bandz-க்கு தடையே விதித்து விட்டன. இன்னும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒழுங்காக வேலைகளைச் செய்யும் குழந்தைகளுக்கு இதையே பரிசாகக் குடுக்க ஆரம்பித்தனர். இன்னும் silly bandz பற்றிய விவாதங்கள் பள்ளிகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போ இங்க கோடை விடுமுறைங்கறதால கொஞ்சம் பள்ளிகளுக்கு மூச்சு விட சந்தர்ப்பம். அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கும்போது மீண்டும் இந்த விஷயம் செய்திகளில் அடிபடும்.
இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த கம்பெனி ஒரு பைசா கூட விளம்பரத்துக்கு செலவு செய்யவில்லையாம். அனைத்து விளம்பரங்களும் சோசியல் நெட்வொர்க் தளங்களான facebook, twitter வழியாக மட்டுமே செய்யப்பட்டிருகின்றன. எதேச்சையாக ஆரம்பித்த ஒரு சிறிய ஐடியா இன்றைக்கு அந்த கம்பெனிக்கு மில்லியன்களை அள்ளிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது! 24 பேண்ட்கள் கொண்ட ஒரு பாக்கெட் விலை இங்கே 5 டாலர்கள், விலை அதிகம் தான். ஸில்லி என்று பெயர் வைத்தது இதை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கும் அப்பா அம்மாக்களைக் குறித்து தானோ? நாங்களும் எங்க வீட்டுல பணம் செலவு பண்ணி இந்த silly bandz காய்ச்சலில் இருக்கிறோம் - அந்த ஆதங்கத்தில் தோன்றிய பதிவு! மேலும், இன்றைய CNN செய்திகளில் இதைப் பற்றிய ஒரு செய்தியைப் பார்த்த உடன் எழுதியது. அந்த CNN வீடியோ பார்க்க நினைப்பவர்கள் இங்கே செல்லவும்!
Labels:
American Life
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
எங்கூர்லே ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட்ஸ்ன்னு சில வருசங்களுக்கு முந்தி வந்து பசங்க இதே வேலையா இருந்துச்சுங்க.
இப்ப என்ன வந்துருக்கோ?
நான் ஒரு வருசமா ஊரில் இல்லை.
சில்லி guys....
நாம பலவருசமா கையிலயும் கழுத்துலயும் கட்டிக்கிட்டு திரியறத விடவா பெருசா பண்றாங்க...
நடக்கட்டும் நடக்கட்டும்....
நீங்க என்ன என்ன கலர்ல சாமி வச்சிருக்கீங்க...
தங்கமும் வைரமுமா மாட்டுவதுதான் சந்தோஷம்னு, நாமெல்லாம் சில்லியா அலையும் போது ,இந்த சில்லி பேண்டில், மழலைகள் சந்தோஷப் படுவது சந்தோஷம்தான்.
நன்றி துளசி கோபால், அகல்விளக்கு மற்றும் கோமா!!
துளசி: இந்த பிரண்ட்ஷிப் பேண்ட் செய்த நிறுவனம் தான் ஸில்லி பேண்ட்சிலும் நுழைந்துள்ளார்கள் போல. இன்னும் customized பிரண்ட்ஷிப் பேண்ட்களும் இங்கே பிரபலம் தான்!
அகல்விளக்கு: ஒரு பாக்கெட்ல எல்லா கலர்லயும் போட்டுக்குடுதாங்க..நாங்க வாங்கியது விலங்குகள் வடிவம்!
கோமா: இப்ப ரப்பர் பேண்ட் போட்டுட்டு திரியரவங்க தான் இன்னும் கொஞ்ச வருஷத்துல டயமண்டு கேட்பாங்களோ?
nan kooda chilly parotta kanakka irukkum nu parthal.. vidu.. en kiragam
Post a Comment