அமெரிக்காவில் ஒரு முடிதிருத்தும் கடைக்கு ஒரு பூக்காரர் சென்றார். வேலை முடிந்ததும் எவ்வளவு என்று கேட்க, அதற்கு முடிதிருத்துபவர், "நான் சேவை செய்கிறேன்..எதற்கும் பணம் கொடுக்க வேண்டாம்" என்று கூறுகிறார். பூக்காரருக்கு ஆச்சரியம். நன்றி தெரிவித்து விட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். அடுத்த நாள் முடிதிருத்துபவர் கடையைத் திறக்க வரும்போது வாசலில் அவருக்கு ஒரு நன்றி கார்டும் பெரிய பூங்கொத்தும் இருக்கிறது. இரண்டாவது நாள் அதே கடைக்கு ஒரு சாக்லேட் கடை உரிமையாளர் வருகிறார், அவரும் ஆச்சரியப்பட்டுத் திரும்புகிறார். மூன்றாம் நாள் முடிதிருத்துபவர் கடையைத் திறக்க வரும்போது வாசலில் அவருக்கு ஒரு நன்றி கார்டும் பெரிய சாக்லேட் பாக்சும் இருக்கிறது. மூன்றாம் நாள் கடைக்கு ஒரு இந்திய சாப்ட்வேர் காரர் வருகிறார், வேலை முடிந்ததும் அவரும் ஆச்சரியப் பட்டு திரும்புகிறார். அதற்கு அடுத்த நாள் கடையை திறக்க வரும்போது முடிதிருத்துபவரால் கடைக்கு அருகில் கூட செல்ல முடியவில்லை. அந்த ஊரில் இருக்கும் அத்தனை இந்திய சாப்ட்வேர் மக்களும் கடை வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்!
********************************
அமெரிக்காவில் மட்டும் காணக் கிடைப்பவை:
1. பிட்ஸா டெலிவரிக்காரன் ஆம்புலன்சை விட வேகமாக வீட்டுக்கு வந்து விடுவான்.
2. டபுள் சீஸ் பர்கர், லார்ஜ் fry, சாக்லேட் குக்கி உடன் diet கோக் ஆர்டர் செய்பவர்கள்!
3. $ 30000 கொடுத்து வாங்கிய காரை காராஜில் நிறுத்தாமல் வெளியே நிறுத்தி விட்டு உடைந்த பொருட்களைப் போட்டு கராஜை மூடி வைப்பவர்கள்!
********************************
ஒரு நாள் சொர்க்க வாசலில் பெரிய வரிசை. முதலில் ஒரு சர்தார்ஜி வருகிறார். அவரைப் பார்த்த செயின்ட் பீட்டர், "உன்னைப் பற்றி சொல்லு" என்கிறார். உடனே சர்தார்ஜி, " என் பெயர் குர்தாஸ், நியூயார்க் சிட்டியில் டாக்ஸி டிரைவராக வேலை செய்தேன்" என்கிறார். செயின்ட் பீட்டரும் தனது லிஸ்டை சரி பார்த்து விட்டு, "சரி இந்த பட்டுத்துணி உடுத்திக் கொண்டு தங்க வாகனத்தில் சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்று கூறிகிறார். அடுத்து வரிசையில் ஒரு பாதிரியார். "என் பெயர் ஜோசப், பல இடங்களில் பாதிரியாராக சேவை செய்தவன்" என்கிறார். செயின்ட் பீட்டரும் தனது லிஸ்டை சரி பார்த்துவிட்டு, "இந்த சாதாரண துணியை உடுத்திக் கொண்டு நடந்து சொர்க்கத்துக்குள் செல்லலாம்" என்கிறார். இதைப் பார்த்ததும் செயின்ட் பீட்டரின் உதவியாளருக்கு சந்தேகம் வந்து அவரிடம் எதற்கு இந்த வித்தியாசம் என்று கேட்கிறார். அதற்கு செயின்ட் பீட்டர், "அவரவர் செய்த வேலையைப் பொறுத்து தான் இங்கு பரிசு, அந்த பாதிரியார் பிரசங்கம் செய்த போது முக்கால் வாசி பேரு தூங்கிட்டாங்க. ஆனால், குர்தாஸ் எப்போதெல்லாம் நியூயார்க் சிட்டியில் கார் ஓட்டினாரோ அப்போதெல்லம் கார் உள்ளே இருந்தவர்கள், வெளியே நடந்தவர்கள் எல்லாரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கடவுளை மட்டும் நினைத்தார்கள்" என்றார்!
********************************
"பஞ்ச் பஞ்சாமிர்தம்":
சிகரெட்: காகிதத்தில் சுத்தப்பட்ட புகையிலையின் ஒரு முனையில் நெருப்பு, மறுமுனையில் முட்டாள்.
********************************
2 comments:
Chithuppu! Puthu lookalaa potalum Trafica kanumay!
CM varradhukkaga traffic orangatti vachirukkangappu!
Post a Comment