Saturday, January 2, 2010

அவதார் (2009) - விமர்சனம்


2009 ஆண்டு முடிவடையும் தருணத்தில் வந்து உலகைக் கலக்கி கொண்டு இருக்கும் படம். Titanic படம் எடுத்து உலகையே தன் பக்கம் திருப்பிய James Cameron இன் 4 வருட முயற்சி தான் கிராபிக்ஸ் கலக்கலில் வந்திருக்கும் அவதார். முதலில் ஒரு டிஸ்கி: இந்த படத்தை 3D இல் மட்டும் பார்க்கவும். அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் IMAX-3D இல் பார்க்கும் வாய்ப்பு இருந்தால்  தவற விடாதீர்கள். நான் 3D மற்றும் IMAX-3D இரண்டிலும் பார்த்தேன். 3D இல் ஒரு படத்தை 3D இல் பார்ப்பது போலவும், IMAX-3D இல் நாமே அந்த படத்தில் நடைபெறும் காட்சிகளுக்கு உள்ளே இருப்பது போலவும் அருமையான அனுபவம் கிடைக்கிறது.

ஏற்கனவே சில பல விமர்சனங்களில் கூறி இருந்தது போல படம் நம்ம ஊரு மசாலா படங்களின் கதையை ஒத்து இருப்பது உண்மை தான்..விட்டலாச்சார்யா காலத்து கூடு விட்டு கூடு பாயும் விஷயங்களும் உண்டு தான். இப்படி என்ன கூறினாலும் படத்தில்  முதலில் இருந்து கடைசி வரை (2:40 மணி நேரம், அதுவும் இங்கே interval இல்லாமல்) நம்மைக் கட்டிப் போடும் வித்தை இருக்கிறது. ஒரு வெற்றிகரமான படத்திற்கு அது தானே தேவை!

இந்த படத்திற்கும் நம்ம ஊரு நமிதாவிற்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இந்த படத்தில் என்ன எதிர்பார்த்து போகிறீர்களோ (3D effect, graphics பிரமாண்டம்) அது தேவைக்கு அதிகமாகவே தரப்பட்டிருக்கிறது. நமிதா படத்தில் போய் நடிப்பையோ கதையையோ எதிர்பார்த்து போனால் எப்படி அது நம் தப்போ அது போல....சரி விடுங்க. நமிதாவைப் பத்தி பேசி அவதார் ஐ மறந்திரப் போறோம்!!!

தொழில் நுட்ப முன்னேற்றங்கள் நம்மை ஆச்சரியப் பட வைப்பது (getting impressed, chcho cute என்று கூறுவது போல) ஒரு வகை, நம்மை பிரமிக்க வைப்பது (mind-boggling, overwhelming) என்பது இன்னொரு வகை. இந்தப் படத்தில் ஒரே சமயத்தில் நம்மை ஆச்சரியப் படவும், பிரமிக்கவும் வைக்கிறார்கள். படத்தின் கதையையோ, மற்ற விவரங்களையோ கூறி உங்களின்  எதிர்பார்ப்பை திசை திருப்ப விரும்பவில்லை. ஆனால், சினிமா ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று.

9 comments:

R.Gopi said...

//James Cameron இன் 4 வருட முயற்சி தான் கிராபிக்ஸ் கலக்கலில் வந்திருக்கும் அவதார். //

-*-*-*-*-*-*-*-*-*

இதைவிட அதிக வருட உழைப்பு என்று சொன்னதாக ஞாபகம்... கேபிளார் சரியாக சொல்லலாம்...

நேரமிருப்பின் இங்கேயும் வாருங்கள் தோழரே...

சந்திரமுகி (ரீவைண்ட் 2005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம் http://jokkiri.blogspot.com/2009/12/2005.html

2009 – 2010 சிறப்புப் பார்வை – (பகுதி – 2) http://edakumadaku.blogspot.com/2009/12/2009-2010-2.html

அருமையான எருமை said...

நன்றி கோபி! 15 வருடங்களாக இந்த கதையை James Cameron வைத்திருந்தாலும் 2006 இல் இருந்து தான் படம் எடுக்கும் முயற்சிகள் முனைப்புடன் ஆரம்பித்ததாக நான் படித்ததாக ஞாபகம்.

கண்டிப்பாக உங்கள் பக்கத்திற்கு கூடிய விரைவில் வருகிறேன்! மீண்டும் நன்றி!

பாலா said...

எல்லோரும்.. இதை 12 வருட உழைப்புன்னே சொல்லிகிட்டு இருக்காங்க.

அதே மாதிரி வால்யூமை டெக்னாலஜின்னும் சொல்லுறாங்க. இது மாதிரி தவறானத் தகவலை எந்த மீடியா பரப்புதுன்னு தெரியலை! :(

பாலா said...

பஃபல்லோவா நீங்க! :)

செப்டம்பரில் நயாகரா வந்திருந்தோம் தல. உங்களை அப்ப அறிமுகம் இருந்திருந்தா பார்த்திருக்கலாம்! :(

அருமையான எருமை said...

நம்ம பக்கமும் வந்து உங்கள் கருத்துகளை தெரிவிச்சதுக்கு மிக்க நன்றி பாலா! word verification ஐ தூக்கிட்டேன். ஆப்கான் ஸ்டார் படம் இந்த வருடம் ஆகஸ்ட்/செப்டம்பர் சமயங்களில் சில தியேட்டர்களில் மட்டும் ரிலீஸ் பண்ணினாங்க போல..நான் இங்க ஒரு பிலிம் பெஸ்டிவலில் நவம்பர் மாதம் பார்த்தேன். கூடிய விரைவில் DVD வந்திரும்!!

போன வருஷம் நயாகரா வந்திட்டு போனீங்களா.. அதெற்கென்ன, அடுத்த சம்மர்ல இன்னும் ஒரு தடவை வாங்க!! நயாகரா தவிரவும் பார்க்க நிறைய இடங்கள் அருகில் இருக்கின்றன. snow போட்டோவைப் பார்த்த பிறகு எப்படியும் இன்னும் சில மாதங்களுக்கு இந்த பக்கம் வர மாட்டீங்க?! :-) நீங்க Jacksonville ல இருக்கீங்களா? உங்களுக்கு அருகில் உள்ள Tallahassee இல் நான் 2 வருடங்களுக்கு மேல் இருந்தேன் (2004-2006).

பாலா said...

ரெண்டு முறை பஃபல்லோ வந்திருக்கேன். ஒருமுறை மட்டும்தான் நயாகரா பார்க்க முடிஞ்சது.

விசா மாத்திட்டனால.. ஸ்டாம்ப் வாங்கற பிரச்சனை. அதனால கனடா பக்கம் போகலை.

நிச்சயம் ஒரு ட்ரிப் போட்டுடுவோம்! :)

இந்த ஊர் குளிரே தாங்கலை (37 டிகிரி). உங்க ஊருக்கு இப்பவா?? :) :)

-
உங்களை ஃப்ளோரிடா கூப்பிடலாம்னு பார்த்தா... ஹிஹி..ஹி.. டல்லஹாஸியா?! :) :)

நான் அப்ப ஹாலிவுட்டில் (ஃப்ளோரிடா) இருந்தேன்.

Ezhavathu manithan said...

yappAdi.. oru vazhiA kammeNdu adikka uLla vandhAchu. hollywood bAlA vin mudhal kELvi (buffalo vaa neenga?) kku badhil ai kANumE!

அருமையான எருமை said...

வாங்க மனிதன்..ஆதி மனிதனா இருந்து ஏழாவது மனிதனா மாறிடீங்க போல..கமெண்ட்ஸ் பக்கத்தில் இருந்த பிரச்னையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி..ஹாலிவுட் பாலாவின் முதல் கேள்வி (buffalo வா நீங்க..)க்கு பதில் என்ன ன்னு நண்பரான உங்களுக்கு தெரியாதா? உங்க நண்பன் நான்..நீங்க கரடியா இருக்கும்போது நான் எருமையா இருக்க கூடாதா?

Ezhavathu manidhan said...

siRu correxn : nAn Ezhavadhu manidhanA irundhu thAn Adhi manidhanA mArinEn..